அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை என்பது சமூக மற்றும் ஆன்மீக நலனை முன்னிறுத்தி செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். மனிதநேயம், சேவை மனப்பான்மை மற்றும் ஆன்மீகப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளை வழங்குவது எங்கள் முக்கிய நோக்கமாகும்.
எங்கள் அறக்கட்டளை மூலம் பழமையான கோவில்களின் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிவலிங்கங்கள் நிறுவுதல், பழமையான கோவில்களை சுத்தம் செய்து பராமரித்தல் மற்றும் அவற்றில் அணையா விளக்கு ஏற்றுதல் போன்ற பணிகளும் தொடர்ந்து செய்யப்படுகின்றன.
மேலும், எங்கள் அறக்கட்டளை மூலம் ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு அன்னதானம், கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்குதல் மற்றும் தெருநாய்களுக்கு தினசரி உணவு அளித்தல் போன்ற மனிதநேய சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் மருத்துவ அவசர நிலைகளில் பொருளாதார உதவி, சுகாதார தேவைகளுக்கான ஆதரவு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவி சாதனங்கள் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எங்கள் அறக்கட்டளை பாடுபடுகிறது.
இந்த இணையதளம் மூலம் எங்கள் சேவைகளை வெளிப்படையாக மக்களிடம் கொண்டு சேர்த்து, நன்கொடையாளர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட பொதுமக்களை ஒன்றிணைத்து, சமூக மற்றும் ஆன்மீக சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கமாகும்.
Account Name: Anbu Thane Ellam Sethu Trust
Account No: 7824540122
IFSC: IDIB000T095
Branch : Easwari Nagar, Thanjavur
Account Name: Anbu Thane Ellam Sethu Trust
Account No: 99999342732720
IFSC: HDFC0001004
Branch : South Main Street, Thanjavur
அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை
#73, அப்துல் வஹாப் நகர், மாருதி நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி (எதிரில்)
ரெட்டிப்பாளையம் சாலை
தஞ்சாவூர் – 613009
தொலைபேசி: 8754283435, 9342732720
பதிவு எண்: BK4-79/2024, BK4-8/2025, BK4/105/2025
சமூக ஊடகம்